விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கான குழுவை அறிவித்த பாஜக

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள குழுவை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதாவின் முக்கிய நிர்வாகிகள் இந்த குழுவில் இடம்பெறவில்லை.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் இவர்களை தவிர்த்து நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே