ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்தேன் – மோடி

வறுமையை புத்தகங்களிலிருந்து இல்லாமல் ரயில்வே நிலையங்களில் டீ விற்றதன் மூலமாக அறிந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கேள்வி பதில் நேரத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் மிகப்பெரிய அரசியல் கட்சியை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல என்றும் ரயில் நிலையங்களில் டீ விற்றதன் மூலம் வறுமையை அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

வரிய மனிதர் ஒருவர் தன்னால் வறுமையை ஒழிக்க முடியும் என்றால் அதைவிட பெரிய தியாகம் எதுவும் இல்லை என்றும் அப்படிப்பட்ட ஒருவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே