நீட் ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்களுக்கு ஜாமின்; தந்தையர் மனுக்கள் தள்ளுபடி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் ராகுல் டேவிஸ் அரும்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

இருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மாணவர்கள் முக்கிய குற்றவாளிகள் இல்லை என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதேநேரம் அவர்களின் தந்தை தான் குற்றத்திற்கு காரணம் என்பதால் இரு மாணவர்களின் தந்தையான டேவிஸ் மற்றும் சரவணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி ஜாமின் வழங்குவதாக கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை கருத்தில் கொண்டு தந்தையர்களின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே