ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற படகுகளில் 8 படகுகளைத் தவிர மற்ற படகுகள் கரை திரும்பிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா கலந்துகொண்டு, 332 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 12 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
ஆழ் கடலுக்கு செல்லும் படகுகளுக்கு சாட்டிலைட் மொபைல் வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
2021 ஆம் ஆண்டிலும் அ.தி.மு.க.தான் ஆட்சியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.