என்னுடைய சொத்துகள் யாருக்கு என உயில் எழுதி வைத்துவிட்டேன் – நித்யானந்தா..

மரணத்துக்கு பிறகு தமது உடலை பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக சாமியார் நித்தியானந்தா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் தினமும் திரையில் தோன்றி சத்சங்கம் நடத்தி வருகிறார்.

நேற்று சத்சங்கத்தில் பேசிய சாமியார் நித்தியானந்தா, தாம் யாருக்கும் எதிரானவன் அல்ல என்றும்; ஸ்ரீகைலாசா மூலம் சமூகத்துக்கு ஆன்மிக பணியை செய்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

இந்தியா தமது தாய் போன்றது எனவும் கூறியுள்ளார்.

தாம் மரணம் அடைந்த பிறகு மதுரை ஆதீனத்தில் எந்த முறையில் உடலை அடக்கம் செய்வோர்களோ அதேபோன்று பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தம்மை அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக நித்தியானந்தா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தமது சொத்துக்கள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 குருபரம்பரை ஆதீனத்துக்கு சேரும் வகையில் உயில் எழுதி வைத்திருப்பதாக நித்தியானந்தா கூறியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே