ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான் – முதலமைச்சர் பழனிசாமி

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை சட்டம் தொடர்பாக பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளனர் என்றார்.

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர்களுக்கு திமுக என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார்.

இலங்கை தமிழர்களுக்கு உதவுவது போல் திமுக நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்றார்.

மக்களை சந்திக்க திமுக தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், மாநில தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும், ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே