கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் – நடிகர் சூர்யா ட்வீட்..!!

நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி வந்துள்ளது ஒருவித நம்பிக்கை அளித்துள்ளது.

பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். 

வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம்.

அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரும் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே