தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.
5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக பார்க்கும் போது இன்று அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சென்னையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 59 பேரும், திண்டுக்கல்லில் 45 பேர், நெல்லையில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.