சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் – காவல்துறை எச்சரிக்கை..!!

சசிகலா காரில் பொருத்தப்பட்டுள்ள அதிமுக கொடி அகற்றப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார் சசிகலா.

அவர் தனது கார் முன் பக்கத்தில் அதிமுக கட்சி கொடியை கட்டியுள்ளார்.

ஏற்கனவே, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ரிசார்ட்டில் தங்க சென்ற போதும் தனது கார் முன்பு அதிமுக கொடி கட்டி இருந்தார்.

சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பதால், கட்சிக் கொடியை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று அமைச்சர்கள் டிஜிபியை நேரில் சந்தித்து சமீபத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக எல்லையான ஓசூரில் ஜூ ஜு வாடியில் அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு நோட்டிஸ் தரப்படும். காரில் இருந்து அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும்.

காவல்துறை அவகாசம் வழங்கிய பிறகும், காரிலிருந்து கொடியை அகற்றாவிட்டால் அடுத்த வரவேற்பு இடத்தில் அகற்றப்படும்.

அதாவது ஓசூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் அல்லது பேருந்து நிலையம் அருகில் சசிகலா காரில் பயன்படுத்தப்படும் அதிமுக கட்சிக் கொடி அகற்றப்படும். 

அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே