மேட்டூர் அணையிலிருந்து நீர்த்திறப்பு நாளையுடன் நிறுத்தப்படுகிறது

மேட்டூர் அணை நாளை மாலையுடன் மூடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

அப்போது முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணைக்கு வினாடிக்கு 518 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசன நீருக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் நாளை மாலையுடன் மேட்டூர் அணையில் நீர்திறப்பு நிறுத்தப்படுகிறது.

அணையில் தொடர்ந்து நீர் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அணையை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே