நவம்பர் 14-ம் தேதியை OPS Day என்று அறிவித்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவுரவம்…!

துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த 12-ம் தேதி அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ் மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட அவருக்கு, மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது.

நேற்று முன் தினம் ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.

இதனை அடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பாக விழா நடைபெற்றது.

அதில் டெக்சாஸின் ஃபோர்ட்லாண்ட் மேயர் டாம்ரிட், நவம்பர் மாதம் 14-ஆம் தேதியை ஓ.பி.எஸ் டே என்று அறிவித்து கவுரவித்தார்.

இந்த விழாவில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *