நியூயார்க் இந்திய தூதரக அதிகாரியுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நியூயார்க்கின் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தியை சந்தித்து பேசினார்.

நியூயார்க்கில் உள்ள தாஜ் ஹோட்டலில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக சந்தீப் சக்ரவர்த்தி கூறியிருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடனிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே