BREAKING NEWS : சபரிமலைக்கு வந்த பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சபரிமலைக்கு வந்த பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

உச்ச நீதிமன்றம் பெண்கள் நுழைய தடை எதுவும் விதிக்காததால், பல பெண்கள் கோவிலுக்கு வர முன் பதிவு செய்திருந்தனர்.

10 முதல் 50 வரை வயது பெண்கள் கோவிலுக்கு வந்தால், பாதுகாப்பு அளிக்கப்படாது என்று கேரள அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுஜாதா உட்பட 10 இளம்பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

அவர்கள் நிலக்கல் பகுதியை தாண்டி பம்பை வரை வந்துவிட்டனர்.

இதன்பிறகு காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டைகளை வாங்கி சோதித்து பார்த்தபோது அவர்களில் 7 பேர், சுமார் 40 முதல் 45 வயதுக்குள் உள்ளே இருப்பது தெரியவந்தது.

பம்பையில் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சபரிமலை மரபுப்படி 10 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளும், 50 வயதுக்கு மேலே உள்ள மூதாட்டிகள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.

எனவே 7 பெண்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து பாதுகாப்பு கருதி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே