உலகளிவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது.

மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ள நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,81,47,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,05,463 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே