தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தார்.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 30ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னை தாம்பரத்தில் 15 சென்டி மீட்டரும், அரியலூரில் 10 சென்டி மீட்டரும், சீர்காழியில் 7 சென்டி மீட்டரும், கடலூரில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.