ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இருப்பினும் தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை.
அதன்படி
- ஐந்தாம் வகுப்பு தேர்வு 15.4.2020-ல் தொடங்கி, 20.4.2020 ல் முடிவடைகிறது.
- எட்டாம் வகுப்பு தேர்வு 30.3.2020-ல் தொடங்கி 17.4.2020-ல் முடிவடைகிறது.
ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.