தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீ.,யும், கோத்தகிரியில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே