உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் மரண பீதியில் செத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், சீனாவோ வர்த்தகத்தில் ஈடுபட்டு, உலக வர்த்தகத்தை தன்னகத்தே ஈர்த்து வருகிறது.
வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளில் மிகப் பெரிய வங்கி ஹெச்டிஎப்சி.
இந்த பொதுத்துறை வங்கியின் 1,74,92,909 பங்குகளை, அதாவது 1.01 சதவீதம் பங்குகளை சீனாவின் பீபிள் பாங்க் ஆப் சீனா வாங்கியுள்ளது.
கடந்த ஜனவரி, மார்சுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தப் பங்குகளை சீன வங்கி வாங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் ஹெச்டிஎப்சியின் பங்குகள் வீழ்ச்சி அடையத் துவங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த வங்கியின் பங்கு மதிப்பு 41 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது.
இதை சீன வங்கி தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.
ஜனவரி 14ஆம் தேதி ஹெச்டிஎப்சியின் பங்கு மதிப்பு 32 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
அப்போது சென்செக்ஸ் 25 சதவீதமும், நிப்டி 27 சதவீதமும் சரிந்து இருந்தது.
ஏப்ரல் 10ஆம் தேதி ஹெச்டிஎப்சி பங்கு மதிப்பு ரூ. 1,701.95 ஆக இறங்கியது.
இதுவே முன்பு உயர்ந்தபட்சமாக ரூ. 2,499.65 ஆக இருந்தது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் எல்ஐசியும் ஹெச்டிஎப்சியின் பங்குகளை வாங்கி இருந்தது.
இதையடுத்து, எல்ஐசியின் பங்குகள் சதவீதம் ஹெச்டிஎப்சி வங்கியில் 4.21 சதவீதத்தில் இருந்து 4.67 ஆக அதிகரித்தது.
சீன வங்கி மார்ச் 2019அன்று ஹெச்டிஎப்சி வங்கியில் 0.8 சதவீதம் அளவிற்கு பங்குகளை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.