திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 2 பேர் திருச்சி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்; மேலும் 2 பேர் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நான்கு பேரில் ஒருவயது குழந்தையும் அடக்கம்.
குழந்தையின் தந்தைக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், தந்தை மூலம் அந்த குழந்தைக்கு கொரோனா பரவியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருச்சியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9-வது இடத்தில் திருச்சி உள்ளது