#BREAKING : கட்டுப்பாடு பகுதிகளில் ஹால்டிக்கெட் வீடு தேடி வரும்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலும், 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும்; 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வினை எழுதிடாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் தேர்வு நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) 04.06.2020 (வியாழக் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்து தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 

பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரால் நுழைவுச் சீட்டு வழங்கிடும் போது மாணவர்களுக்கான நேர அட்டவணை (Time Schedule) தெரிவித்து தனிமனித இடைவெளியை கடைபிடித்திடும் வகையில் கட்டம் வரைந்து அதற்குள் நின்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்றிட வேண்டும்.

மேலும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்குரிய நுழைவுச் சீட்டு தலைமை ஆசிரியர் மூலம் அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே