நாளை முதல் ரயில் முன்பதிவு மையங்கள் திறப்பு – தெற்கு ரயில்வே

ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற நாளை முதல் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற, முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் முதல் பெற்றுக்கொள்ளலாம்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், சென்னை பீச்,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும்;

அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 12-ம் தேதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும்; 

ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 நாள் வரை ரயில் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஜூன் மாதம் வரை தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.

இதனால் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே