அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா??

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மறுநாளும் நீடிக்கும் என்பதால் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போதும் புத்தாண்டுக்கு மறுநாளான ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கேற்ப ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் 3-ம் தேதி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் 6-ம் தேதி திங்கள் அன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே