#BREAKING NEWS : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தப்படுகிறது.

முதலில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரியில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி, சட்ட பஞ்சாயத்து இயக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்த சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லாததால் மனுவை ஏற்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் என்றும் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே