#JUSTIN :மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு…!!

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை 137 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்று காலை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி. கருப்பணன், சரோஜா ,மாநிலங்களவை உறுப்பினர் சந்திர சேகரன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீர் திறப்பால் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதல் கட்டமாக 500 கன அடியில் தொடங்கி 1,000 கன அடி வரை நீர் திறப்பு உயர்த்தப்படும். 97லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கால்வாய் திறக்க மோட்டார் பொருத்தப்பட்டுள்ள நிலையில் மின்சக்தி மூலம் மதகுகள் இன்று திறக்கப்பட்டன.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே