தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத பனிமூட்டம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் காணப்படுகிறது.  சப்தார்ஜங் பகுதியில், தட்ப வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சென்றது.

வெப்பநிலை குறைந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

அயாநகர் பகுதியில் 2,5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. குளிரால் டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.

பல இடங்களில் மக்கள் குளிரை போக்கிக் கொள்ளும் வகையில் தீ மூட்டி குளிரில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.

அதன்காரணமாக வாகனங்களில் வருவோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.

30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

விமான நிலையங்களில் ஓடுதள பாதை தெரியாத அளவுக்கு பனி போர்த்தியது போன்று காணப்படுகிறது. கடுமையான பனிமூட்டம் நிலவியதால், 3 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்ன.

இன்று முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே