நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
நெகிழி இல்லாத தமிழகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 10 லட்சம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்கும் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பள்ளி மைதானத்தில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.