நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான இன்று நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

தீபாவளி, புத்தாண்டு போல் குழந்தைகள் தினத்தையும் ஒரு பண்டிகை போல் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.

இன்றைய தினத்தில் நம்முடைய குழந்தைகளினால் நமக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து, நமது அன்பால் நன்றி செலுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே.

குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும்.

குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும்.

குழந்தைகளின் ஆரம்பக் கல்வியினை உறுதி செய்வது நமது கடமையாகும்.

இதனை வழங்க அனைத்து பெற்றோர்களும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே