தேர்வு எழுதும் மாணவர்கள் முககவசம் பயன்படுத்த சிபிஎஸ்இ அனுமதி!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

தேர்வு நடைபெற்று வரும் காலம் என்றாலும் மாணவர்கள் மத்தியில் எளிதாக வைரஸ் பரவிவிடும் என்பதால், அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறையின் உதவியுடன் இதனை பள்ளிகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் முககவசம், ஹேண்ட் சானிட்டரை கொண்டு வர சிபிஎஸ்இ அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், முக கவசம் அணிந்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, சிபிஎஸ்இ அனுமதியை வழங்கி இருக்கிறது.

சிபிஎஸ்சி தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் முககவசம் அணிந்து கொள்ளவும், தேவைப்பட்டால் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை எடுத்து வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே