ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைய காத்திருக்கும் தீவிரவாதிகள்

ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைவதற்காக ஐநூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காத்திருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

200 முதல் 300 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் துணையுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலைமை சீர் அடையாமல் வைத்துகொள்ள சதி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதாகவும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இந்தியாவிற்குள் ஊடுருவபவர்களின் எண்ணிக்கை மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே