பொருளாதார பிரச்சனையை தீர்க்க மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெறுங்கள்: ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனைக் கேட்குமாறு மத்திய அரசை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தி.நகரில் இன்றைய இந்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய சிதம்பரம், பொருளாதாரம் தெரியாதவர்கள் பொருளாதாரப் பிரிவில் பணியாற்றுவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனைகள் கூறினால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதை சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.  

மத்திய பாஜக அரசு, மன்மோகன் சிங்கை எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்று பார்க்காமல் பொருளாதார நிபுணர் என்கிற அடிப்படையில் ஆலோசனைக் கேட்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே