பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க படிப்படியாக அனுமதி – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவல் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை.

காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்

விவசாய பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே, அவர்களின் வேளாண் பணிகளுக்கான வாகனத்தை தடுத்து நிறுத்த வேண்டாம்.

அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த நோய் தொற்று ஒழிக்கப்படும். கிராமத்தில் பெரும் அளவு நோய் தொற்று குறைந்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள் 50 வயதுக்கு மேல் இருந்தால், அவர்கள் வேலை வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இதற்கு காரணம் சென்னை பெரு நகரம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. குறுகலான தெருவில் அதிக மக்கள் வசிக்கும் காரணத்தால் எளிதாக நோய் பரவுகிறது.

நகரப்பகுதியில் இருக்கும் கழிப்பறைகளை 3 முறை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு மக்களுக்கு கிடைக்குமா ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.

பச்சை பகுதி மாவட்டத்தில் படிப்படியாக தொழில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். 

சிவப்பு மாவட்டங்களை ஆரஞ்சு மாவட்ட மாகவும், ஆரஞ்சு மாவட்டங்களை பச்சை மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்போது தான் தொழில்கள் துவங்க முடியும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே