தமிழகத்தில் புதிதாக 3,914 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 3,914 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,87,400 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 56 பேர் (அரசு மருத்துவமனை -27, தனியார் மருத்துவமனை -29) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,642 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 4,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,37,637 பேர் குணமடைந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே