பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் : சிபிஎஸ்இ

பொது ஊரடங்கு முடிந்தபின் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும்; 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

10,12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கோரிய நிலையில் சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே