டெல்லி : வீட்டு வாடகையை அரசே செலுத்தும்…! – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் வீட்டு வாடகையை அரசே செலுத்தும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகினர்.

சிறப்பு பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவிக்கும் போது, “நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே தங்குங்கள்” எனக்கூறியதாகவும், இதையே ஊரடங்கு உத்தரவின் மந்திரமாக தான் கருதுவதாகவும் கூறினார்.

மக்கள் இதை பின்பற்றாவிட்டால் கொரோனா போராட்டத்தில் நாடு வெற்றி பெறாது எனக்கூறிய கெஜ்ரிவால், வெளிமாநில மக்கள் யாரும் வெளியேற வேண்டாம் எனக் கைக்கூப்பி முறையிட விரும்புவதாகவும்; அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: