வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்த தொடங்கியதும், பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்தார்.

ஓராண்டுக்கு பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்ற மோடிக்கு டாக்கா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே