நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம் விலை… இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.976 உயர்வு..!!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,592 ஆக அதிகரித்துள்ளது.

கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,324 க்கு வீரப்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ரூ.42,408க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல, ஒரு கிராமுக்கு ரூ.99 உயர்ந்து ரூ. 5,301-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,600 உயர்ந்துள்ளது.

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே