தமிழகத்தில் ஆக.10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி..!!

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு இன்று முதல் அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், மூன்றாம் கட்ட தளர்வாக உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் போன்ற இடங்களை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பின்பு திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே