ஏற்றுமதி தடையால் வெங்காய விலை குறைகிறது

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, உள்நாட்டில் வெங்காய விலை குறையத் தொடங்கியுள்ளது.

நாசிக் மொத்த கொள்முதல் சந்தைகளில் வெங்காயம் விலை குறைந்தது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த சில்லரை வியாபாரிகள் 100 குவிண்டால் கையிருப்பும் மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் கையிருப்பும் வைத்திருக்கலாம் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

ஆனால் இதனை எதிர்த்து நாசிக்கில் விவசாயிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

வெங்காய மண்டிகளில் ஏலம் நடப்பதைத் தடுத்து நிறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை ஆக்ரா சாலையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே