ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,952க்கு விற்பனையாகிறது.
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் தங்க விலை ரூ.30ஆயிரத்தில் நீடித்து வந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் அதாவது மார்ச் மாதத்தில் இருந்து தங்க விலை அதிரடி ஏற்றத்தை சந்தித்தது.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சியாலும் வரத்து குறைந்தததாலும் தங்க விலை உயருவதாக கூறப்படுகிறது.
அச்சமயத்தில் சுமார் ரூ.43 ஆயிரம் வரை வரலாறு காணாத விலை உயர்வை அடைந்த தங்க விலை, ரூ.50 ஆயிரத்தை எட்டும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இதனையடுத்து தங்க விலை குறைந்து ரூ.39 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.
இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,952க்கு விற்பனையாகிறது.
அதன் படி தங்க விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,616க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30க்கு விற்பனையாகிறது.