தகர பிஸ்கட்டுக்கு தங்க முலாம் பூசி மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தகர பிஸ்கட்டுக்கு தங்க முலாம் பூசி, பேருந்திற்காக காத்திருந்தவரிடம் 3 சவரன் நகையை ஒரு கும்பல் பிறித்து சென்றுள்ளது.

திருவனந்தபுரம் கைக்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்தார்.

மீண்டும் சொந்த ஊர் செல்ல வடசேரி பேருந்து நிலையம் வந்தவரிடம், டிப்டாப் உடையணிந்த மூன்று பேர் நட்பாக பேசி உள்ளனர்.

தங்களிடம் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், பணப் பிரச்சினை காரணமாக அதனை விற்க விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என கணேசன் கூற, நகையை தருமாறு அந்த கும்பல் கேட்டிருக்கிறது.

பேராசை கொண்ட கணேசன் செயின் மோதிரம் என மூன்று பவுன் நகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு தங்க பிஸ்கட்டுகளை வாங்கி இருக்கிறார்.

பின்னர், சோதனை செய்து பார்த்ததில் அவை போலியானவை என்று தெரிய வரவே, வடசேரி காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே