டெங்கு காய்ச்சலால் ஏழாம் வகுப்பு மாணவர் மரணம்

சென்னை தாம்பரம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓட்டேரியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ராஜேஷ் அங்கு உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் காய்ச்சல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப்பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜேஷ், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிர் இழந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே