அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் மரணம் : ஸ்டாலின் அதிர்ச்சி

வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல் நலக்குறைவினால் இன்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காத்தவராயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றப்போதும் அவை பலன் அளிக்காமல் உடல் பிரிந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றவர் எம்.எல்.ஏ. காத்தவராயன்.

இவர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்துள்ளார்.

58 வயதான இவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்.

நேற்று திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ காலமாகியுள்ளார். அடுத்தடுத்த 2 நாட்களில் திமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் காலமாகியுள்ளனர்.

முன்னதாக மருத்துவமனையில் பேராசிரியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்னும் அபாய கட்டத்தில் இருப்பதினால், தனது பிறந்தநாளை கொண்டாட மனமில்லை என்று பிறந்த நாள் விழாவினை ரத்து செய்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, திமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே