தொகுதி கிடைக்காததால் கவுதமி விரக்தியில் ட்வீட்..!!

நடிகைகள் குஷ்பு, கவுதமி, நமீதா ஆகிய மூவரும் பாஜகவில் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு மற்றும் கவுதமி இருவரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர்.

அந்த வகையில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு விரும்பினார். அதேபோல, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் நடிகை கவுதமி. இருவரும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அந்தந்த பகுதிகளில் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

நடிகை கவுதமி ராஜபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கிராம கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். 

சுவர் விளம்பரம், வால்போஸ்டர் என அனைத்தையும் பாஜகவினர் தேர்வு செய்தனர். ஏன் கவுதமிக்கு தாமரை சின்னத்தில் ராஜபாளையத்தில் வாக்குசேகரிக்கவும் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதில், சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களம் காண்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் குஷ்பு, கவுதமி ஆகியோர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதனால் அவர்கள் வேறு எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது ஏமாற்றம் குறித்து நடிகை கவுதமி வெளிப்படையாகவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கவுதமி தமது ட்விட்டர் பக்கத்தில் , ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்துக் கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள்.

என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி, உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன்.

நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே