உள்ளாட்சித் தேர்தல் : நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

வெளியூர் நபர்கள் நாளை மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இன்று மாலைக்குள் அந்த மையங்கள் தயார்நிலையில் வைக்கப்படும்.

255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சி தலைவர், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒரு கோடியே 38 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள்.

வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே