மம்தா மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல். இத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
இந்த தாக்குதல் குறித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் இணைந்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மம்தா விரைவில் உடல்நலம் தேற வாழ்த்துகிறேன்’
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.