ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயன்பெற்றது ஒவ்வொரு இந்தியரும் பெருடைப்பட வேண்டியது என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள், குறிப்பாக ஏழைகளின் நம்பிக்கையை பெற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சம், அதன் பரவலாக்கம் எனவும்; இதன் மூலம் சிறந்த மருத்துவப் பராமரிப்பை சிகிச்சையை எங்கு பதிவு செய்திருந்தாலும் நாட்டின் எந்த பகுதியிலும் பெற முடியும் என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பயனாளர்கள் பயன்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், கோடி பயனாளராக நிறைவு செய்த கடைசி பெண்மணியான மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தாப்பாவிடம் பேசிய தொலைபேசி உரையாடலையும் பகிர்ந்துள்ளார்.