நாடு கடத்த தடை கோரிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவுக்கு நாடுகடத்தக் கூடாது என பிரிட்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், வங்கிக்கடன் மோசடி வழக்கு விசாரணைக்காக நாடு கடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு இருந்த சட்ட ரீதியான வாய்ப்புகளும் அனைத்து முடிவடைந்ததாக தெரிவித்த நீதிதிபதிகள், பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி இல்லை எனவும் உத்தரவிட்டனர்.
இதன் மூலம், தொழிலதிபர் விஜய் மல்லையா விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெர்வித்துள்ள சிபிஐ, கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.