பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்

பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தமிழக முதல்வரிடம் வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பனை மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது தாத்தா பனை ஏறியவர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் தாம் பங்கேற்றதாக தெரிவித்தார்.

பனை மரம் என்பது  கற்பகத்தரு எனவும் பனை மரம் குறித்து தமிழ் பாடல்களில்  சொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடார்.

நீர்நிலைகளை பாதுகாத்திட பனை மரம் முக்கிய பங்காற்றுவதாகவும் முதிர்ச்சி அடைந்த பனை மரங்களை விற்பதற்கு அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகனம் வழங்குவது போல் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன்  குறிப்பிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இந்த மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பனை தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மாநாட்டு மேடையில் பேசிய அவர், கள் மீது குற்றம் சுமத்தி, அதை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை தெரிவித்தார்.

பனை பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தாங்கள் என்றும் துணை நிற்போம் எனவும் மணிகண்டன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே