டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேருந்தில் பயணம் மேற்கொண்டு அதனை ஆய்வு செய்தார்.
காவலர்களின் பாதுகாப்புடன் பேருந்தில் ஏறிய அவர், பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் இத்திட்டம் பற்றிய நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
எம்.பிக்கள் மற்றும் எல்.எல்.ஏக்கள் போன்றோர் மட்டுமே இலவசமாக பயணம் செய்து வந்த நிலை மாறி, சாதாரண பெண்களும் தற்போது இலவச பயணம் மேற்கொள்வதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசதி டெல்லியில் முதல் கட்டமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.