இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயிரிழந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாடு முழுவதும் 415 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டின் 19 மாநிலங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்தார்.

டும் டும் பகுதியைச் சேர்ந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபர் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே